கல்லுாரியில் பொங்கல் விழா
காரைக்குடி: கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கோவிலுார் ஆதினம் ஞான தேசிக ஸ்வாமி தலைமையேற்றார். இவரை முதல்வர் கலா வரவேற்றார். தாளாளர் வீரப்பன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாணவர்கள், மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். தப்பாட்டம், குதிரை நடன வரவேற்புடன் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பேராசிரியர்கள் மாணவர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.