உள்ளூர் செய்திகள்

இயற்கை வேளாண் பயிற்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் எஸ்.கல்லுப்பட்டி, அழகியநல்லுார், புல்லுார், வலையங்குளம் பகுதிகளில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியை மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் அளித்தனர்.எஸ்.கல்லுப்பட்டியில் கொய்யாவில் பழ ஈ கட்டுப்பாடு குறித்து மதுரை வேளாண் கல்லுாரி மாணவி உமா உள்பட 10 பேர் அடங்கிய மாணவிகள் குழுவினர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.மேலும், அழகியநல்லுாரில் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தி மக்காச்சோளம் விதை நேர்த்தி செய்முறை விளக்கத்தை, இக்கல்லுாரி சுவேதா உள்பட மாணவியர் குழுவினரும், புல்லுாரில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், பயன்கள் குறித்தும், வலையங்குளத்தில் வேர் அழுகல், வாடல் நோய் உள்பட பல்வேறு மண்வழி நோய்களை கட்டுப்படுத்துவது குறித்தும் மாணவி வருணா உள்பட குழுவினர் விவசாயிகளுக்கு விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்