பள்ளி தாளாளர்கள் கலந்துரையாடல்
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்லூரியில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.கல்லூரி இயக்குனர் அருணா தலைமை வகித்தார். இயக்குனர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் செல்வபெருமாள் வரவேற்றார்.என்.பி.ஆர்., கல்வி குழுமம் சார்பில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்க உருவாக்கப்பட்ட தொழில்துறை திறன் சோதனை மையம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆய்வகம் ஆகியவற்றை பள்ளி தாளாளர்கள் பார்வையிட்டனர்.இக்கல்வி குழுமத்தின் சார்பாக வழங்கப்படும் மாணவர்களுக்கான பல்வேறு செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர்கள் சரவணன், அன்னலட்சுமி, ரேமுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.