உள்ளூர் செய்திகள்

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் முதலிடம்

மதுரை: மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் என்.எம்.எம்.எஸ்., தேர்வு எழுதிய 109 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தனர்.மத்திய அரசு சார்பில் மாநிலம் முழுவதும் அரசு, உதவி பெறும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதல் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9 முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.48 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டு தேர்வில் மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்கள் 109 பேர் வென்று மாநிலத்தில் முதலிடம் பெற்றனர். இப்பள்ளி தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம் வென்றுள்ளது.இம்மாணவர்களை பள்ளி அதிபர் ஹென்றி ஜெரோம், தாளாளர் குழந்தைராஜ், தலைமையாசிரியர் சைமன்ராஜ், உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்