மாணவர் சேர்க்கை ஊர்வலம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னபாலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மார்ச் 1 முதல் 2026 - 27க்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.புதிய மாணவர் சேர்க்கை, அரசு நலத்திட்டங்கள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் செல்லம்மாள் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.