உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு முகாம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் வேலை வாய்ப்பு மையம் சார்பாக முகாம் நடந்தது.நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரிச் செயலர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். முதல்வர் ராதா துவக்கி வைத்தார். சென்னை சுவர்ன் லட்டா மதர்சன் டிரஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் திவ்யா, கார்த்திக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் 134 மாணவர்கள் கலந்து கொண்டனர். குழு விவாதம், திறனறிவு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 75 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு மைய தலைவர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்