பள்ளி ஆண்டு விழா
காரியாபட்டி: காரியாபட்டி சாலைமறைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.மாணவர்கள் எழுதிய செம்பருத்தி சிறார் என்ற பாடல்களின் தொகுப்பு நூலை தலைமையாசிரியை ராஜலெட்சுமி வெளியிட்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனம், பாடல்கள், நாடகங்கள் நடந்தன. மாணவர்கள், பெற்றோருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ரூ.1,500 காசோலை வழங்கப்பட்டது.