உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

சென்னை: பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்ததால், மே 31ம் தேதி வரை, மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தமிழக அரசு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டு, நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை நடத்தப்பட்டன.முதல் வகுப்பில் இருந்து 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த 1ம் தேதி முதல், நேற்று வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. இன்று முதல் மே 31 வரை, 45 நாட்களுக்கு கோடை விடுமுறை. பள்ளிகள், ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்