மழலையர் பட்டமளிப்பு விழா
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மழலையர் தொடக்கப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. விவேகானந்தா கல்வி குழும தலைவர் கே.ரங்கசாமி பட்டங்களை வழங்கினார்.துணைத் தலைவர் கலைவாணி, நவமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி இயக்குனர் அருண்கீர்த்தி, பள்ளி தாளாளர் மகிபாலா, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி, பள்ளி முதல்வர் நாகேஸ்வரன் வாழ்த்து தெரிவித்தனர்.