ஏ.பி.வி.பி., மாணவர்கள் ஊர்வலம்
புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு சார்பில், மாணவர் உரிமை பேரணி நடந்தது. அதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.டில்லி பல்கலைக்கழகத்தில் நேற்று பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களின் உரிமை பேரணி நடந்தது. அதில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் கூறியதாவது:பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதாக கல்லூரிகளுக்கு செல்லும் வகையில் வழி ஏற்படுத்த வேண்டும். ஒரு கோர்சுக்கு ஒரு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.இந்த மாணவர் பேரணிக்கு, இந்த அமைப்பின் டில்லி மாநில செயலர் சர்தாக் சர்மா தலைமை வகித்தார்.