உயர்கல்வி தேர்வில் கவனம்
பள்ளிக் கல்வியை முடித்த பிறகு மாணவர்கள் எடுக்கும் உயர்கல்வி தேர்வே அவர்களின் தொழில் வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் சமூக நிலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.இதனால், தங்களின் விருப்பம், திறமை மற்றும் எதிர்கால இலக்குகளை கருத்தில் கொண்டு சரியான உயர்கல்வி படிப்பை தேர்வு செய்வது அவசியமாகியுள்ளது.தற்போது பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.உயர்கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பாக மட்டும் இல்லாமல், ஒரு மாணவரின் முழுமையான வாழ்க்கை முன்னேற்றத்திற்கான அடித்தளமாகும்.ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதால், தக்க கல்வியாளர்களின் வழிகாட்டுதல் பெற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முடிவு எடுக்க வேண்டும்.