இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
மதுரை: மதுரை புதூர் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் இளைஞர்களுக்கு கட்டண பயிற்சிகளை அறிவித்துள்ளது.ஜூன் 20, 21 ஆகிய இருநாட்கள் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, பதிவு நடைமுறை, வரித்தாக்கல் செய்வது உள்ளிட்ட பயிற்சி நடக்கிறது. இதற்கான கட்டணம் ரூ.3,540. பதினெட்டு வயது நிரம்பிய பிளஸ் 2க்கு மேல் இருபாலரும் பங்கேற்கலாம். மேற்கண்ட நாட்களில் நடக்கும் மசாலா பொருட்கள், ஊறுகாய் தயாரிக்கும் செய்முறை பயிற்சிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரம்.ஜூன் 27, 28 தேதிகளில் நடைபெறும் தலைமுடி ஷாம்பு, எண்ணெய், சீரம் தயாரிப்பு, பராமரிப்பு பயிற்சிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரம். இப் பயிற்சிகளில் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பிற்கு மேல் இருபாலரும் பங்கேற்கலாம். காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பயிற்சி நடைபெறும். ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார், கல்விச் சான்றிதழ் நகல், எஸ்சி., அல்லது எஸ்டி., வகுப்பினராக இருந்தால் அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும். முன்பதிவுக்கு 86956 46417, 86670 65048ல் தொடர்பு கொள்ளலாம்.