திறன் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை: உலகத் திறன் போட்டி - 2026ல் இந்தியா சார்பில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டி - 2027க்கான பதிவுகள் துவங்கியுள்ளன.மாவட்டத்தை சேர்ந்த 16 முதல் 25 வயதுக்குட்பட்ட பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் பங்கேற்கலாம். திறன் பிரிவை பொறுத்து வயது வரம்பில் மாற்றம் இருக்கும். 60க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.பங்கேற்க விரும்புவோர், ஸ்கில் இந்தியா டிஜிட்டல் இணையதளம் வாயிலாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 94884 62613 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.