உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு கற்பித்தல் பயிலரங்கம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை சிறப்பு கல்வி மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை மற்றும் விஷன் எம்பவர் சார்பில் மண்டல அளவிலான பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான அணுகத்தக்க கல்வி உத்திகள் என்ற தலைப்பில் பயிலரங்க தொடக்க விழா நடந்தது. துணைவேந்தர் ஜெயகாந்தன் தலைமையேற்று பேசினார். அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவன சிறப்பு கல்வி துறை தலைவர் சம்பத் ராணி பேசினார். அழகப்பா பல்கலை கல்வியியல் துறை தலைவர் கலையரசன், விஷன் எம்பவர் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி வாழ்த்தினர். பயிலரங்கில் பார்வை குறைபாடு உடைய மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் சார்ந்த கல்வியை அணுகத்தக்க முறையில் வழங்குவதற்கான கற்பித்தல் உத்திகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பேராசிரியை சுஜாதாமாலினி வரவேற்றார். உதவியாளர் பாண்டி மீனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்