உள்ளூர் செய்திகள்

கணக்குக்கு அப்பாற்பட்ட கணினி

கணினி வேகமாக வேலை செய்கிறது. ஆனால் சில பிரச்னைகளுக்கு வேகம் மட்டும் போதாது; முற்றிலும் வேறுவிதமான கணக்கீட்டு முறை தேவைப்படுகிறது. அங்குதான் குவான்டம் கணினி வருகிறது.வழக்கமான கணினி பிட் என்ற 0 அல்லது 1 அடிப்படையில் இயங்குகிறது. குவான்டம் கணினியின் அடிப்படை அலகான கியூபிட், குவாண்டம் இயற்பியலின் தன்மைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் சில குறிப்பிட்ட வகை கணக்கீடுகளை முற்றிலும் புதிய முறையில் அணுக முடியும்.மருந்து மூலக்கூறு வடிவமைப்பு, புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு, சிக்கலான ஒப்புமைப்படுத்தல்கள், நிதி மாதிரிகள், குறியாக்கம் போன்ற துறைகளில் இதற்கான பயன்பாடுகள் ஆராயப்பட்டு வருகின்றன.இந்தியாவின் தேசிய குவான்டம் இயக்கத்துக்கு 2023 - 24 முதல் 2030 - 31 வரை ரூ.6,003.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 50 முதல் 1,000 இயற்பியல் கியூபிட்கள் கொண்ட இடைநிலை குவான்டம் கணினிகளை உருவாக்குவது அதன் இலக்குகளில் ஒன்று.இது நாளைய கணினித் தொழிலுக்கான போட்டி மட்டுமல்ல. குவான்டம் உணரிகள், பாதுகாப்பான குவான்டம் தகவல் தொடர்பு, புதிய குவான்டம் பொருட்கள் ஆகியவற்றுக்கான தொழில் சூழலும் இதனுடன் உருவாகிறது.கியூபிட் என்றால்?வழக்கமான பிட் 0 அல்லது 1. கியூபிட், குவான்டம் நிலைகளின் தன்மையைப் பயன்படுத்துகிறது. இதுவே குவான்டம் கணினியின் அடிப்படை வேறுபாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்