உள்ளூர் செய்திகள்

சைபர் கிரைம் கருத்தரங்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், சைபர் கிரைம் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மஞ்சுள வல்லி வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் பேசினார்.முன்னாள் மாணவரும், மஹராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சிவானந்தன், சைபர் கிரைமினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும், அவர் பேசுகையில், “அறிவியல் முன்னேற்றம் எந்த நிலையில் இருந்தாலும், அதை சமாளிப்பதற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய சுய சிந்தனையை பயன்படுத்தினால் வெற்றி அடைய முடியும். மஹாராஷ்டிரா மாநிலத்தில், 'ரொட்டி பேங்க்' என்ற சமூக அமைப்பினை ஏற்படுத்தி ஏழைகளுக்கு சத்தனா உணவுகளை் இந்த அமைப்பால் வழங்குப்படுகிறது,” என்றார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.முன்னாள் மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்