மகளிர் பள்ளியில் விழிப்புணர்வு
நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 'உலகை ஆரஞ்சு நிறமாக்குவோம் - பாதுகாப்பே எங்கள் முதன்மை' என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார்.இந்நிகழ்ச்சியில், மாணவியர் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்காப்பு கலை கற்பதன் நுணுக்கங்களையும், மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவியர், ஒரு கஷ்டமான சூழ்நிலையில் எவ்வாறு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும், டாக்டர் மல்லிகா, இன்னர் வீல் உறுப்பினர்கள் காஞ்சனா, ராகவி, அருள்செல்வி ஆகியோர் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களையும், பெண்கள் பாதுகாப்பில் அவர்களுடைய பங்களிப்பையும் விளக்கினர்.