உள்ளூர் செய்திகள்

தண்டேவாடாவில் புதிய பள்ளிகள்!

சத்தீஷ்கரின் மிக மோசமான நக்சல் பாதிப்பு பழங்குடியினர் மாவட்டமான தண்டேவாடாவில் 3 ரெசிடென்ஷியல் பள்ளிகளை மாநில அரசாங்கம் திறக்க உள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. தண்டேவாடாவில் உள்ள கசோலி, பதேபனேரா மற்றும் பர்சூர் போன்ற ஊர்களில், தலா 50 இடங்களைக் கொண்ட 3 ரெசிடென்ஷியல் பள்ளிகள் 94.42 லட்சம் செலவில் அரசால் கட்டப்பட உள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மாநில பொதுப்பணித்துறை இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும். பள்ளி கட்டிடங்களில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிடும் மத்திய துணை ராணுவப்படையினர் தங்கிக்கொள்ள அரசு அனுமதி அளித்ததால், கடந்த சில ஆண்டுகளாக பல பள்ளி கட்டிடங்களை மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தகர்த்தனர். இதனால் தண்டேவாடா மாவட்டத்தில் பள்ளிகளின் செயல்பாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்