பல்கலைக்கழகங்களுக்கான புதிய வசதி
யு.ஜி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ்வரும் நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்கள் வரும் நாட்களில் புதிய வசதியை பெறவுள்ளன. அதன்படி, &'இன்போநெட்&' எனப்படும் இன்டர்நெட் வசதியை, 256 கே.பி.பி.எஸ். முதல் 2 எம்.பி.பி.எஸ். வரையிலான பேண்ட்வித் வலிமையுடன் அந்த பல்கலைக்கழகங்கள் பெறும்.