சென்னை மாணவர்களுக்கு உதவித்தொகை
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகையும், பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்க ரூ.28.5 லட்சத்தை சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. சென்னை பெரம்பூரிலுள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச ஜியோமெட்ரி பாக்ஸ் வழங்கும் விழாவில் பங்கேற்ற மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் இதுகுறித்து கூறியதாவது, "மொத்தம் 1182 மாணவர்கள் உதவித்தொகையும், மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க பயிற்சியளித்ததற்காக 935 ஆசிரியர்கள் ஊக்கத்தொகையும் பெறுகின்றனர். வரும் ஜனவரி 20 ம் தேதி கீழ்பாக்கத்தில் நடக்கும் விழாவில் இந்த தொகைகளை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவித்தார்.