உள்ளூர் செய்திகள்

என்.சி.இ.ஆர்.டி. வழங்கும் உதவித்தொகை

கல்வி தொடர்பான துறைகளில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு என்.சி.இ.ஆர்.டி., டாக்டோரல் உதவித்தொகையை வழங்குகிறது. இந்த ஆராய்ச்சியில், தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு தொடர்பான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதாமாதம் ரூ.12000 வழங்கப்படும். இந்த உதவித்தொகையைப் பெற நீங்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் உங்களின் விண்ணப்பத்துடன், சுமார் 1500 வார்த்தைகளைக் கொண்ட, மேற்குறிப்பிட்ட கருத்துடன் கூடிய ஒரு ஆய்வுக் கட்டுரை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதொடர்பான விரிவான விவரம் அறிய என்.சி.இ.ஆர்.டி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செல்லவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்