உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1 தேர்வில் கருணை மதிப்பெண்

சென்னை: பிளஸ் 1 கணினி அறிவியல் தேர்வில், 24வது கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின், விடைத்தாள்களை திருத்தும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், பிளஸ் 1 கணினி அறிவியல் பாட வினாத்தாளில் இடம் பெற்ற, 24வது கேள்வி தவறானது என, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று தெரிவித்தனர்.இதை ஏற்ற தேர்வுத்துறை, அந்த கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும், கருணை அடிப்படையில் 2 மதிப்பெண் வழங்க அனுமதி அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்