உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு கரூரில் 2,628 பேர் விண்ணப்பம்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.பின், அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், 10 மையங்களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 முதல்நிலை தேர்வு வரும், 27ல் நடக்கிறது. இதில், 2,628 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பறை, தடையற்ற மின்சார வசதி, தேர்வர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவை முறையாக செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பணியாற்ற, 10 முதன்மை கண்காணிப்பாளர், 10 அறை கண்காணிப்பாளர், 2 பறக்கும் படையினர் மற்றும் 14 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வின் போது முறைகேடு நடைபெறாத வகையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியுள்ள, வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நாளன்று தேர்வு எழுத வருபவர்கள் காலை 9:00 மணிக்குள் வருகை புரிய வேண்டும். போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்