நாளை குரூப்-1 தேர்வு 3,115 பேர் பங்கேற்பு!
திருப்பூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், நாளை நடக்கும் குரூப்-1 தேர்வை, திருப்பூர் மாவட்டத்தில், 3,115 பேர் எழுத உள்ளனர். திருப்பூர் தெற்கு தாலுகாவில், குமரன் மகளிர் கல்லூரி; எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி மற்றும் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; திருப்பூர் வடக்கு தாலுகாவில், கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, சசூரி வித்யாபவன் மெட்ரிக் பள்ளி, விகாஸ் வித்யாலயா பள்ளி, சிக்கண்ணா அரசு கலை கல்லூரி, சின்னசாமி அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில், தேர்வு நடக்க உள்ளது; 3,115 பேர் எழுத, விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு, 12 தலைமை கண்காணிப்பாளர்கள், 12 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 20 நபருக்கு ஒருவர் என, 156 பேர், அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, துணை தாசில்தார் தலைமையில், இரண்டு மொபைல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு, போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; வீடியோ பதிவு செய்யவும். மின் வினியோகம் உட்பட, அனைத்து அடிப்படை வசதியையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.