உள்ளூர் செய்திகள்

சட்டப் படிப்பில் 10 தங்கப் பதக்கம் வென்ற மாணவத் தங்கம்!

நிர்வாக சட்டம், அரசியலமைப்பு சட்டம், சர்வதேச சட்டம், தொழிலாளர் நலச் சட்டம், பேங்கிங் சட்டம், பொதுச் சட்டம், அறிவுசார் சொத்துரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் அவர் சிறப்பிடம் பெற்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற கல்வி நிலையத்தில் ஒரு மாணவர் 10 தங்கப் பதக்கங்களைப் பெற்று பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சக்தி குப்தா நான்கு பதக்கங்களையும் சிமி ரோஸ் ஜார்ஜ் மூன்று பதக்கங்களையும் தன்மயா மேத்தா, மோனிகா ஸ்ரீவத்ஸா, விகாஸ், சாந்தி வெங்கட்ராமன் ஆகியோர் தலா இரண்டு பதக்கங்களையும் பெற்றனர். பிரீத் இந்தர் சிங், அனிஷா கோபி, ரிச்சா திவாரி, அலி உசேன், அமோக் பசவராஜ் ஆகியோர் தலா ஒரு பதக்கத்தையும் பெற்றனர். நேஷனல் லா ஸ்கூல் வேந்தரும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுமான கே.ஜி. பாலகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை வகித்தார். நாட்டில் உள்ள ஏழு தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டின் மிகப் பெரிய சாதனை. இத்தேர்வு எழுதிய 12 ஆயிரம் மாணவர்களில் 7 ஆயிரத்து 500 மாணவர்கள் நேஷனல் லா ஸ்கூலையே தங்களது முதல் சாய்சாக தேர்வு செய்திருந்தனர். இந்தக் கல்வி நிலையத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது என்று நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ. ஜெயகோபிந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்