ஏ.ஐ., டாப் 100 வரிசையில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
புதுடில்லி: ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், உலகின் டாப் - 100 பிரபலங்களின் பட்டியலை, அமெரிக்காவின் 'டைம்' இதழ் வெளியிட்டுள்ளது. இதில், எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் போன்ற 'டெக்' ஜாம்பவான்களுடன் சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மிதேஷ் காப்ரா இடம் பிடித்துள்ளார்.இவரிடம் பயிற்சி பெற்ற நுாற்றுக்கணக்கான ஐ.ஐ.டி., மாணவர்கள், உலகில் உள்ள டாப் ஏ.ஐ., நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வருகின்றனர். தவிர இந்திய மொழிகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் ஏறக்குறைய துல்லியமாக வேலை செய்வதற்கு காப்ராவின் பங்கு கணிசமாக இருக்கிறது.சென்னை ஐ.ஐ.டி.,யில் துணை பேராசிரியராக பணியாற்றும் காப்ரா, இந்தியாவுக்கான, 'ஏ.ஐ., பாரத்' என்ற தளத்தின் துணை நிறுவனர்.இந்த தளம் இந்திய மொழிகளில் ஏ.ஐ., கருவிகளை பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை செவ்வனே செய்திருக்கிறது.