உள்ளூர் செய்திகள்

டி.ஜி.எம்., பள்ளி 100 சதவீத தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

சேத்தியாத்தோப்பு: டி.ஜி.எம்., பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியுடன் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பாராட்டப்பட்டனர்.சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ஆதிபா 484 மதிப்பெண்கள்; மாணவி ஜெனிலியா 482; மாணவி அக்ஷயா 481; அபிநயா 481; மாணவர் வீரராஜன் 478; மதிப்பெண்கள் பெற்றனர். அறிவியல் பாடத்தில், 3 மூன்று பேர்; கணித பாடத்தில் ஒருவர், 100 மதிப்பெண்கள் பெற்றனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேர், 350 மதிப்பெண்களுக்கு மேல் 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதிக மதிப்பெண் பெற்றும் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன் பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார்.தலைமை ஆசிரியர் நன்மாறன், பொறுப்பாசிரியர் அசோக்குமார், ஆசிரியர்கள், உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர்.மாணவர்கள் மதிப்பெண் பெற காரணமான ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்