உள்ளூர் செய்திகள்

நவோதயா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி நவோதயா வித்யாலயா பள்ளி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பெரியகாலாப்பட்டில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வை இந்த ஆண்டு, 79 மாணவ மாணவியர் எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சிப் பெற்று நுாறு சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர். பள்ளி அளவில், அறிவியல் பிரிவு மாணவர் மகேஷ் பகத் 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் சுதிர் நாயுடு 470 பெற்று இரண்டாம் இடம், அபிமன்யூ குமார் 469 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்தனர். மாணவி ரமேதா, 426 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளி அளவில் வணிகவியல் பிரிவில் முதலிடம் பிடித்தார். மாணவி லலிதா, 425 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், குணசெல்வி 419 பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை, பள்ளி முதல்வர் வினையத்தான், துணை முதல்வர் கமலம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்