‘கேட்’ தேர்வு 11 நாட்களாக நீட்டிப்பு
புதுடில்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, முதல் நான்கு நாள்களில் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தாண்டு முதல் ஆன்லைனில் நடைபெறும் கேட் தேர்வு நவ. 28ம் தேதி முதல் டிச. 7ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, முதல் நான்கு நாட்களில் 8,500 மாணவர்கள் தேர்வு எழுதமுடியாமல் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வரும் டிச. 8ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.