உள்ளூர் செய்திகள்

பிசியோதெரபிஸ்ட்கள் பிப். 12 முதல் கடிதப்போராட்டம்

மதுரை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தாலுகா மருத்துவமனைகளில் புதிய பிசியோதெரபி துறைகள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 40 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் வெறும் 247 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே ரெகுலர் பணியிடங்களில் பணியாற்றி வருகின்றனர் என தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார் கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பிசியோதெரபி துறையின் மேம்பாட்டிற்கு முக்கியமான சில வாக்குறுதிகளை அளித்திருந்தது.ஆனால் ஆட்சி பொறுப் பேற்றதில் இருந்து இதுவரை அந்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை. தேர்தல் அறிக்கையில், தாலுகா மருத்துவமனைகளில் புதிய பிசியோதெரபி துறைகள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.ஆனால் 40 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் வெறும் 247 பிசியோதெரபிஸ்ட்கள் மட்டுமே ரெகுலர் பணியிடங்களில் பணியாற்றி வருகின்றனர். இது ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மிகவும் குறைவானது. ஆகவே புதிய பணியிடங்களை உருவாக்கி, அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் பிசியோதெரபி சேவைகளை கொண்டு வர வேண்டும்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பிசியோதெரபி துறை உருவாக்கம் பற்றிய அறிவிப்பு, தமிழக பிசியோதெரபிஸ்ட்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் 4 ஆண்டுகள் முடிவடையும் தருவாயில் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் வெறும் 47 பணியிடங்களுக்காக மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டது. பிப்.,2ல் இத்தேர்வை 10 ஆயிரம் பிசியோதெரபிஸ்ட்கள் எழுதினர். இந்த 47 பணியிடங்களும் புதிது அல்ல. ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணியிடங்கள்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என கேள்வி கேட்டு பிசியோதெரபிஸ்ட்கள், அவர்களின் குடும்பத்தினர், மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை பிப்.,12 முதல் தொடங்கி உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்