உள்ளூர் செய்திகள்

மாணவர் கல்விக்காக ரூ.1.20 லட்சம் உதவி

சென்னை கந்தக் கோட் டம் முத்துக்குமார சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள வசந்த மண்டப அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடந்தது. மொத்தம் 200 மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1.20 லட்சத்தை அறங்காவலர் குழுத்தலைவர் முத்து வழங்கினார். கோவில் நிர்வாகிகள் திலக்குமார், லட்சுமி நாராயணன், வக்கீல் முரளிமோகன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்