உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் சரிந்தது 150 அடி நீள பள்ளி சுவர்

கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம் தனியார் பள்ளியில் 150 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதன் அருகே பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று மதியம் இயந்திரம் மூலம் பணி நடந்தது. அப்போது திடீரென 150 அடி நீள சுவரும் சரிந்து விழுந்தது. இதில் கொடைக்கானலை சேர்ந்த பாஷித், 40, உட்பட இருவர் காயமடைந்தனர். சிலர் லேசான காயங்களுடன் தப்பினர்.கொடைக்கானலில் கட்டுமான பணிகளின் போது இயந்திரங்களை அதிகளவு பயன்படுத்துவது சரிவுகள் ஏற்பட காரணமாக உள்ளது. மேலும், பெரும்பாலான கட்டுமானங்கள் நிபந்தனைகளின் படி கட்டப்படுவதில்லை. நகராட்சி நகர அமைப்பு அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்யாமல் இருப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்