உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., குருப்-2 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-2 முதல்நிலைத் தேர்வில், விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்ற 205 மாணவர்களில், 125 பேர் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.மேலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சிகள் நடத்தப்பட்டு அதில் 12 மாணவ, மாணவிகள் பணி வாய்ப்பினை பெற்றனர். தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு இதுவரை 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., குருப்-2 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த புதன் கிழமை விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கியது.வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வாரமும் பாடவாரியான தேர்வுகளும் மற்றும் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்