உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, தொடங்கியது.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அரசு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு , பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.வாரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பை, கலெக்டர் வீரப்பன், தொடங்கி வைத்தார். இதில், 148 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்