உள்ளூர் செய்திகள்

ஜுலை இறுதிக்குள் பிளஸ்2 துணைத் தேர்வு முடிவு

தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மூன்றுக்கும் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு கடந்த ஜுன் 22 முதல் ஜுலை 2ம் தேதி வரை நடைபெற்றது. சிறப்பு துணைத் தேர்வை 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளதாகவும், தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகிவிடும் என்றும் தேர்வுத் துறை தெரிவிக்கிறது. பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்