டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ மாதிரி தேர்வு
காரைக்குடி: ஜனவரி 24-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., மூலமாக நடக்க உள்ள குரூப் 2 ஏ., தேர்வை எதிர்கொள்ளும் வகையில், அழகப்பா பல்கலையில் இரண்டு மாதிரி தேர்வு, பல்கலை கழக தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு தயாராக உள்ள வேலை நாடுநர்கள் இதில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள், அழகப்பா பல்கலை கழக லெ.சித.லெ. பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க தரை தளத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அல்லது, 88707 81897 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வருகை பதியலாம். முதல் மாதிரி தேர்வு வருகிற 20-ம் தேதியும், இரண்டாம் மாதிரி தேர்வு ஜனவரி 10ம் தேதியும், அழகப்பா பல்கலை கழக கல்வியியல் கல்லூரி வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் என, பதிவாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.