உள்ளூர் செய்திகள்

இன்ஜி., நேரடி 2ம் ஆண்டு கவுன்சிலிங் துவக்கம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது.டிப்ளமோ முடித்த மாணவர்கள் பி.இ., நேரடி 2ம் ஆண்டு சேர்வதற்கான கவுன்சிலிங்கை காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி நடத்துகிறது.இதில் 2555 இடத்திற்கு மாற்றுத்திறனாளி பிரிவில் 24, முன்னாள் ராணுவ வாரிசு பிரிவில் 36, விளையாட்டு பிரிவில் 105 மாணவர்கள் ஒதுக்கீட்டின்படி கலந்து கொண்டனர்.நாளை (ஜூலை 21) நடக்கும் பொதுபிரிவுக்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில் 4000 பேர், ஜூலை 27ல் நடக்கும் 2ம் கட்ட கவுன்சிலிங்கில் 9636 மாணவர்கள் என 51,096 இடங்களுக்கு 13,636 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.அடுத்த கட்ட (துணை) கவுன்சிலிங் ஜூலை 25 முதல் ஆக., 1 வரை நடைபெறும். பி.எஸ்சி., முடித்த மாணவர், பட்டியலின, அருந்ததியினர் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் ஆக., 2ல் நடைபெறும்.நேற்று கவுன்சிலிங்கை கல்லுாரி முதல்வர் சிவானந்தராஜா, ஒருங்கிணைப்பாளர் உமாராணி, துணை ஒருங்கிணைப்பாளர் பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்