போலீஸ் எழுத்துத்தேர்வு: 2 லட்சம் பேரில் 4,154 பேர் தேர்ச்சி
திண்டுக்கல்: தமிழகத்தில் இரண்டு லட்சம் பேர் போலீஸ் எழுத்து தேர்வு எழுதினர்.இதில் 4,154 பேர் மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2ம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த டிசம்பரில் உ<டற்தகுதி தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு, மார்பளவு, உயரம், கயிறு ஏறுதல், குண்டு எறிதல் நீளம் தாண்டுதல் உட்பட பல திறன்கள் கண்டறியப்பட்டன. உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் இன்டர் நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இதில் 4,154 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக தேர்வானவர்கள் விபர பட்டியல் அந்தந்த மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 772 ஆண், 290 பெண்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர்.இதில் 46 பெண்கள், 113 ஆண்கள் உட்பட 159 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.