பாலிடெக்னிக்கில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர
நேரடியாக இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 ல் தொழில் பிரிவு படித்தவர்கள் அல்லது 10ம் வகுப்பு முடித்து இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள், பாலிடெக்னிக்குகளில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம். இந்த சேர்க்கை நடைமுறைகளை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. 2011-12ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கியுள்ளது. மே 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், விவரங்களை www.tndte.com இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.