உள்ளூர் செய்திகள்

பிட்ஜீ டாப்பர்ஸ் 2023 நிகழ்வு

சென்னை: நீட் தேர்வில் பிட்ஜீயில் படித்து தேர்வான மாணவர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.சி.சி., அரங்கில் நடந்தது.  இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழு மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர்.நீட் ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரம்:ஜேகப் விபின் (710/720), சஞ்சனா (705/720), சுஷ்ருத் ஜெய்கிஷன் (700/720), ஆதித்யா சாய் விட்டல் (691/720), திவ்யந்த் சவுந்திரராஜன் (666/720), அகிலேஷ் ஆனந்த் (661/720), சரவண் கார்த்திக் (641/720).நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்பர்கள் தங்களுடைய வெற்றி பயணத்தைப் பற்றி விவரித்தனர். நீட் தேர்வுக்கு தயாராகும்போது இடையிடையே ஓய்வெடுத்தல், பொழுது போக்கு, ஆக்கப்பூர்வமாக சிந்தித்தல் ஆகியவை பற்றி பேச்சாளர்கள் பேசினர். நீட் தேர்வுக்கு படித்தல் மற்றும் தயாராவதில் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து வெற்றி பெற்றவர்கள் பகிர்ந்து கொண்டனர். கல்வி மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு இடையே சமநிலையை உருவாக்கும் வகையில் கருத்துக்களை எடுத்துரைத்தனர். இலக்குகளை நிர்ணயித்தல், கற்றல் திட்டம், கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்