உள்ளூர் செய்திகள்

பொறியியல் கலந்தாய்வில் 2117 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்

சென்னை அண்ணா பல்கலையில் நடந்து வரும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வின் நான்காம் நாளான நேற்று மொத்தம் 666 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 103 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 563 மாணவர்களில் 5 மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டனர். அவர்கள் போக 558 மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரியில் பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்து அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். ஜுலை 1ம் தேதி முதல் நடைபெற்று வரும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 4 நாட்களில் 2117 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர். தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜுலை 8ம் தேதியில் இருந்து பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்