உள்ளூர் செய்திகள்

புதிதாக 2562 ஆசிரியர்கள் நேரடி நியமனம்

சென்னை: வரும் நிதியாண்டில், 1,721 முதுகலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படுவர் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, கற்றல், கற்பித்தல் சூழலை நவீனமாக்க, 2,000 பள்ளிகளில், 160 கோடி ரூபாயில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், 56 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும். 2676 பள்ளிகளில், 65 கோடி ரூபாயில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்வரும் நிதியாண்டில், 1,721 முதுகலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படுவர். இதற்கான தேர்வு அறிக்கையை, டி.ஆர்.பி., வெளியிடும்388 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 500 அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு, உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் 2,000 அரசு பள்ளி மாணவர்கள், இந்திய அளவில் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் பயிற்சியளிக்க, 50 கோடி ரூபாய் செலவிடப்படும்மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கும் வகையில், இருப்பிடத்துக்கு அருகிலேயே உயர் கல்வியை தொடரும் வகையில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன்மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்