உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளிகளில் 3 சதவீதம் தேர்ச்சி சரிவு

கோவை: மாநகராட்சி சார்பில் 17 மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 2025 - 26 கல்வியாண்டில், 615 மாணவர்கள், 1,123 மாணவியர் என, 1,738 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். 1,588 பேர் தேர்ச்சி பெற்றனர்.ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 97.36 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பெற்றது.கடந்தாண்டு ஆர்.எஸ்.புரம் மேற்கு மற்றும் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. இம்முறை இல்லை. ஆர்.எஸ்.புரம் பள்ளியில் 6 பேரும், ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் 4 பேரும் தேர்ச்சி பெறவில்லை.மொத்தமுள்ள 17 பள்ளிகளில் 7ஐ தவிர்த்து, 10 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றனர். இவ்வகையில் 30 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.அனைத்து மாணவர்களும் தேர்வெழுதிய 7 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. 83 மாணவர்கள், 67 மாணவியர் என 150 பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்த கல்வியாண்டை காட்டிலும் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சரிவுக்கான காரணங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்க முடிவு செய்திருக்கின்றனர்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, “தேர்ச்சி சரிவுக்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்