கல்விச் சுற்றுலாவில் 3000 மாணவர்கள்
மதுரை: அலங்காநல்லுார் ஏறுதழுவுதல் ஸ்டேடியம் திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியாக தொல்லியல், பாரம்பரிய கலைகள் குறித்த கல்விச் சுற்றுலாவில் மதுரை உட்பட 6 மாவட்ட பள்ளி மாணவர்கள் 3 ஆயிரம் ஒரே நாளில் பங்கேற்றனர்.சிவகங்கை கீழடி, மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், தமுக்கம் மைதானத்தில் நடந்த ஏறுதழுவுதல் தொடர்பான தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் பார்வையிட்டனர். மதுரையில் இச்சுற்றுலாவை முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா துவக்கி வைத்தார். மேலுார் கல்வி அதிகாரி முத்துலட்சுமி, உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன், ஒருங்கிணைப்பு ஆசிரியர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.