உள்ளூர் செய்திகள்

கல்வி கடனுக்கு 350 பேர் விண்ணப்பம்

நுங்கம்பாக்கம்: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து, மாபெரும் கல்வி கடன் முகாமை, நுங்கம்பாக்கம், லயோலா இன்ஜினியரிங் கல்லுாரியில் நேற்று நடத்தின.இவ்விழாவில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வந்த வங்கி நிர்வாகிகளிடம் பேசினார். முகாமில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, கல்விக்கடனுக்கு விண்ணப்பித்தனர். விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வருண் தீபக், மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் கியூரி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்