வேலைவாய்ப்பு முகாம்; 352 இளைஞர்கள் தேர்வு
புதுச்சேரி: தாகூர் கல்லுாரியில் நடந்த தனி யார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில், 352 பேர் தேர்வு செய்யப்பட்டனர். காஸ்மாஸ் ரோட்டரி சங்கம், ஏ.பி. மேலாண்மை கன்சல்டன்ஸ் சார்பில், கலை, அறிவியல், பொறியியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு முகாம், தாகூர் கலைக் கல்லுாரியில் நடந்தது.வேலைவாய்ப்பு முகாமை, ரோட்டரி முன்னாள் கவர்னர் ஜோசப் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். ரோட்டரி 2017ம் ஆண்டு கவர்னர் மணி, கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன், ரோட்டரி உதவி கவர்னர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.வேலைவாய்ப்பு முகாமில், இன்புளோர், இன்டெகரா, மானாடெக், எஸ்.பி.குளோபல், டேட்டாமேட்டிக்ஸ், அப்பாசாமி அசோசியேட்ஸ், சக்குரா, லுக்காஸ் டி.வி.எஸ்., லெனோவா, போர்டு, ரோட்மேப், ரானே, இரேக்கா போர்பஸ், மேரிக்கோ உள்ளிட்ட 17 கம்பெனிகள் பங்கேற்றன. முகாமில், 1300 பேர் பங்கேற்றனர்; இதில், 352 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி ஆணை வரும் வாரத்தில் வழங்கப்பட உள்ளது. முகாம், ஏற்பாடுகளை ரோட்டரி காஸ்மாஸ் சங்க தலைவர் திருவேங்கடம், செயலாளர் பாலமுரளி, திட்ட சேர்மன் ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.