உதவி புவியியலாளர்கள் 39 பேர் பணி நியமனம்
சென்னை: உதவி புவியியலாளர்களாக தேர்வான, 39 பேருக்கு, பணி நியமன ஆணைகளை, அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 29 உதவி புவியியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கும், கருணை அடிப்படையில், அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்ட நான்கு பேருக்கும், பணி நியமன ஆணைகளை, அமைச்சர் துரைமுருகன் நேற்றுமுன்தினம் வழங்கினார்.அதேபோல, மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விபரக் குறிப்பு மைய அலுவலகத்திற்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 10 உதவி புவியியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணையை நேற்று, அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, புவியியல் மற்றும் இயற்கை வளங்கள் துறை செயலர் பணீந்திர ரெட்டி, கமிஷனர் பூஜா குல்கர்னி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.