பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ கட்டுரை போட்டி
கோவை: இஸ்ரோவின் உந்து வளாகம் மகேந்திரகிரி சார்பில், உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடத்துகிறது.'வருங்கால ஏவுகலன்கள்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலத்தில் போட்டி நடத்தப்படும். 9,10,11 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.மாணவர்களின் கையெழுத்தில், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் என 'ஏ'4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.மாணவரின் முழுவிபரங்களுடன், கட்டுரை மாணவரால் எழுதப்பட்டது என்பதற்கான பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் ஒப்புதல் இணைக்க வேண்டும்.கட்டுரைகளை செப்., 25க்குள் 'மூத்த நிர்வாக அதிகாரி, இஸ்ரோ உந்தும வளாகம், மகேந்திரகிரி, திருநெல்வேலி - 627133' என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.உறையின் மீது, 'கட்டுரைப் போட்டி' என குறிப்பிட வேண்டும். தமிழ், ஆங்கில பிரிவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு, அக்., 9ல் மகேந்திரகிரியில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 04637 - 281825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.