உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு

குன்னுார்: அருவங்காடு கிளை நுாலகம், செந்தமிழ் சங்கம் சார்பில் வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடந்தது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-4 தேர்வு ஜூன் மாதம், 9ம் தேதி நடக்கிறது.இந்தத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அருவங்காடு கிளை நுாலகத்தில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அருவங்காடு கிளை நுாலகம் செந்தமிழ் சங்கம் சார்பில், வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச முதல் மாதிரி தேர்வு நடந்தது. அதில், 12 பேர் பங்கேற்றனர், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி தேர்வுகளை நடத்தினார் ஏற்பாடுகளை நுாலகர் ஜெயஸ்ரீ செய்திருந்தார். இன்று, (19ம் தேதி) இரண்டாம் கட்ட மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்