உள்ளூர் செய்திகள்

குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி

கோவை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு எழுதுவோருக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் இலவச பயிற்சி வழங்குகிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2025ம் ஆண்டுக்கான, டி.என்.பி.எஸ்.சி.,தேர்வுக்கான, 3,935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பத்தாம்வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இம்மாதம் 24ம் தேதியே கடைசி. மேலும் விபரங்களுக்கு, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில், வரும் 6ம் தேதி துவங்க உள்ளது. சிறப்பு பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்சி நடத்தப்படுகிறது.இப்பயிற்சியில் பங்கேற்போர், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், வரும் 6ம் தேதி வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். விபரங்களுக்கு 0422 -2642388/ 94990 55937 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்